டெல்லி: டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்.பி.க்கள் வாக்களித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி கூறுவதாக கெஜ்ரிவால் கடிதத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திமுக போராடியதற்காக மனமார்ந்த பாராட்டு என்றும் கெஜ்ரிவால் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.