நைஜீரியாவை சேர்ந்த பெண் சமையல் கலைஞர் ஹில்டா பாசி , இவருக்கு வயது 27. தொழில் அதிபரான இவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை படைத்திருக்கிறார். அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார். லாகோஸ் நகரில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை உற்சாகப்படுத்தியபடி இருந்தனர். அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனையின்போது ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லதாவின் சாதனையைத்தான் ஹில்டா பாசி முறியடித்தார். ஜனாதிபதி முகம்மது புகாரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ஹில்டாவின் 100 மணி நேர சாதனை நிகழ்வும் பிரத்யேகமாக வீடியோவாகப் பதிவாக்கப்பட்டது. மேலும் யூடியூப், இன்ஸ்டாகிராம் என நேரலையிலும் 100 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. என்னதான் தொழிலதிபரானாலும், வீட்டில் பணியாளர்கள் இருப்பினும் கூட சமையல் பொறுப்பை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை ஹில்டா. விதவிதமாக சமைப்பதில் கைதேர்ந்த ஹில்டா பாசி தனது வாழ்த்துக்களும், உற்சாகமும் கொடுத்து ஊக்குவித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்திருக்கிறார்.
– கவின்