சென்னை: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் புதுப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படாததால் கார்த்தி சிதம்பரம் மனு முடித்துவைக்கப்பட்டது.