
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான சூழல் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெறுவது போதாது; 150 தொகுதிகளில் (224) காங்கிரஸ் வெல்ல வேண்டும். ஊழல் கட்சியான பாஜக, பணத்தை வைத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றியை திருடி, ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.