சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.