சென்னை: புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்த்தியுள்ளார். மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல் உள்ளது. ஆணைய கட்டுப்பாட்டால் எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகள், முதலீடு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.