மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 1948ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஐநா சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இத்தகைய உலகம் அறிந்த தலைவர் என்பதாலேயே அட்டன் பிரபு காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார். இத்தகைய சூழலில், பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் மனப்பான்மையோடு மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பிறகு தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்தது என கூறியுள்ளார். வடமாநிலங்களிலும் ஒடிசா தேர்தல் பிரசாரத்தின் போதும் தோல்வி பயம். அதனால் ஏற்பட்ட பதற்றம், அதன் காரணமாக காந்தியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசினார். இதற்கெல்லாம் பரிகாரம் தேடுவதற்காகவே பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டார்.
காந்தியை குறைத்து மதிப்பிட்டு பேசியதற்கு தியானத்தால் மோடி பரிகாரம் தேடுகிறார்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
106