சென்னை: சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித காரணமும் இல்லாமல் உறுப்பினர்களை நீக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.