சென்னை: சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிரான வழக்கில் அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்றதாக மணவாளனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது.