சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரைத்துறையின் கலைஞர் 100′ விழா இன்று நடைபெறுகிறது. திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிவ ராஜ்குமார், பிரபாஸ் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.