சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,915-க்கும் சவரன் ரூ.47,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.83.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.