ஸ்ரீவில்லிப்புத்தூர்: சதுரகியில் காட்டுத்தீ காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பிரதோஷன், பொளர்ணமி நாட்களை ஒட்டி 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ எரிவதால் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. சுமார் 500 பக்தர்கள் அடிவாரப்பகுதியில் காத்திருக்கும் நிலையில், மீதமுள்ள நாட்களுக்கான அனுமதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.