டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.