அரசு மதுபான கடையில் விளம்பர பதாகை வைப்பு: மது பிரியர்கள்- மேற்பார்வையாளர் வாக்குவாதம்
சிதம்பரம், ஜூன் 16: அரசு மதுபான கடையில் மது பிரியர்கள்-மேற்பார்வையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஓமக்குளம் குப்பை கிடங்கு பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கடையில் பணியில் இருந்த மேற்பார்வையாளர், அரசு...
என்எல்சி சவுடு மண் படிந்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
மங்கலம்பேட்டை, ஜூன் 16: என்எல்சி சவுடு மண் படிந்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண்ணானது கொம்பாடிக்குப்பம், ஊத்தங்கால், கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு...
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கம், வெள்ளி திருட்டு: சங்கராபுரம் அருகே துணிகரம்
சங்கராபுரம், ஜூன் 15: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கம், 300 கிராம் வெள்ளி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் லூகாஸ் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாய வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம்...
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
விருத்தாசலம், ஜூன் 15: விருத்தாசலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, காந்தி மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்பளக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்த ராஜவேல் மகன் அல்லிமுத்து...
வங்கி அதிகாரி பேசுவதாக கூறி புதுவையில் 2 பேரிடம் ரூ.1.13 லட்சம் மோசடி
புதுச்சேரி, ஜூன் 15: புதுவையில் 2 பேரிடம் ரூ.1.13 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி பேசுவதாகவும், கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை வழங்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் அனைத்து விவரங்களை மர்ம நபருக்கு வழங்கிய சிறிது...
தவெக அலுவலகம் முன் பாமகவினர் குவிந்ததால் பரபரப்பு
செஞ்சி, ஜூன் 9: தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக செஞ்சி தவெக அலுவலகத்தில் பாமகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டி செஞ்சி தொகுதி பாமக எம்எல்ஏ...
சிறுவனிடம் விசாரணை செய்வதுபோல குற்றவாளியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விருத்தாசலம், ஜூன் 9: மது போதையில் குற்றவாளியுடன் சேர்ந்து சிறுவனிடம் போலீஸ்காரர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரஞ்சித் என்பவர், விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கடந்த 6ம் தேதி இரவு அறிக்கை செய்ய நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பணிக்கு செல்லாமல் ஆப்சென்டாக...
விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மைஅமர்வுநீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், மகளிர், எஸ்சிஎஸ்டி சிறப்பு நீதிமன்றம், லஞ்சம்ஒழிப்பு ஊழல்தடுப்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் என சுமார் 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு...
திருவெண்ணெய்நல்லூர் அருகே பரிதாபம் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலி
திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 8: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபயிற்சியின்போது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகள் யுவஸ்ரீ (29). இவருக்கும், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த...

