சின்னமனூரில் குப்பைகளை அகற்ற கோரிக்கை
சின்னமனூர், ஜன.24: சின்னமனூர் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் அமைந்திருப்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அய்யனார்புரம்...
குடியரசு தினத்தன்று மதுக்கடைகள் அடைப்பு
தேனி, ஜன.24: தேனிமாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக அரசு, குடியரசு தினமான நாளை மறுதினம் (ஜன.26ம் தேதி) அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. எனவே,...
சாலை விபத்தில் மெக்கானிக் பலி
நிலக்கோட்டை, ஜன.23: கொடைரோட்டை அடுத்த அழகம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சின்னமுத்து(20) டூவீலர் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு, பணி முடித்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சக்கையாநாயக்கனூரிலிருந்து அழகம்பட்டி செல்லும் சாலையில் சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தில் டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு...
பெட்டிக்கடைகளில் மர்மநபர்கள் கைவரிசை
தேவதானப்பட்டி, ஜன. 23: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). இவர் நல்லகருப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். மீண்டும் மறுநாள் நேற்று கடையை திறக்க சென்றபோது கடையிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு...
விபத்தில் மருத்துவர் பலி
தேவதானப்பட்டி, ஜன. 23: தேவதானப்பட்டி அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (59). இவர் அக்குபஞ்சர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேவதானப்பட்டி பெரியகுளம் பைபாஸ் சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே நடைபயிற்சி சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அருகிலிருந்தவர்கள் அவரே மீட்டு சிகிச்சைக்காக...
டூவீலர் மீது கார் மோதி விவசாயி படுகாயம்
தேனி, ஜன.22: தேனி அருகே அன்னஞ்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(60). விவசாயி. இவர் தனது வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியை முடித்துக்கொண்டு டூவீலரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை பாதையில் சென்றபோது, பின்னால் வந்த கார், பால்ராஜின் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பால்ராஜ் படுகாயமடைந்தார். உடனடியாக அவர்...
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
தேவதானப்பட்டி, ஜன.22: பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை போரா நிறுவனத்தின் நிறுவனர் ஹரிணி பாலச்சந்திரன் கலந்துகொண்டு, `பிளாஸ்டிக்கை அகற்று - இயற்கையை நேசி’ எனும் தலைப்பில் பேசினார். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படும் என்றார். முன்னதாக வனவியல்...
தனியார் நிறுவனத்தில் புகுந்த மலைப்பாம்பு
வத்தலக்குண்டு, ஜன.22: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு நடகோட்டை மலைப்பகுதியில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று காலை மலைப்பகுதியில் இருந்து வந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. மலைப்பாம்பை கண்டதும் பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்ததும் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர்...
முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா
ஆண்டிபட்டி, ஜன. 21: ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் சக்கம்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில்...

