விவசாயிகள் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்
கரூர், ஜூலை 10: ஒன்றிய அரசு வழங்கிடும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம் வேளாண்மைத்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. வேளாண் அடுக்ககம் திட்டம் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாய நிலங்களை ஒழுங்குபடுத்தி தனித்துவமான அடையாள எண்கள் வழங்கும் பணிகள் இதன் மூலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து பிஎம்கிஷான் ஊக்கத்தொகை...
பசுபதிபாளையத்தில் போக்குவரத்து நெருக்கடி
கரூர், ஜூலை 10: கரூர் பசுபதிபாளையம் சாலையில் பேருந்துகள் பல்வேறு இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் பசுதிபாளையம் அமராவதி ஆற்றின் உயர் மட்ட பாலத்தை தாண்டியதும் பசுபதிபாளையம் கடைவீதி, காவல் நிலையம் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன....
வழிகாட்டல் நிகழ்ச்சியில் தகவல் மாணவர்களின் திறனை செயல்திறனாக மாற்ற வேண்டும்
அரவக்குறிச்சி, ஜூலை 9: மாணவர்களின் திறனை செயல்திறனாக மாற்ற வேண்டும் என ஓய்வு பெற்ற கரூர் அரசு கல்லூரி முனைவர் மாரியம்மாள் வலியுறுத்தினர். கரூர் மாவட்டடம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் நெளஷாத் தலைமையுரை வழங்கினார்....
பத்தாம்பட்டி பிரிவு பகுதியில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கருர், ஜூலை 9: கரூர் மாவட்டம் பத்தாம்பட்டி பிரிவு பகுதியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையோரம் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து ஈசநத்தம், பாகநத்தம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோடங்கிப்பட்டி, பத்தாம்பட்டி பகுதியின் வழியாக...
அய்யர்மலை அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்து சேவை வேண்டும்: எம்எல்ஏவிடம் மாணவர்கள் வேண்டுகோள்
குளித்தலை ஜூலை 9: அய்யர்மலை அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டுகோள் எம்எல்ஏவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி அய்யர்மலை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பொழுது 150 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட கல்லூரி தற்பொழுது 2000 மாணவர்கள் இளங்கலை முதுகலை...
கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
கரூர், ஜூலை 8: கரூர்- திருச்சி பைபாஸ் சாலை மூலக்காட்டனுார் பிரிவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வதை பார்வையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் தி ருச்சி பைபாஸ் சாலை மூலக்காட்டனுார் பிரிவு அருகே சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு...
வரும் 10ம் தேதி முதல்வர் கரூர் வருகை: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆய்வு
கரூர், ஜூலை 8: ஜூலை 10ம்தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கினார். ஜூலை 10ம்தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்...
கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று
கரூர், ஜூலை 8: பலத்த காற்றின் காரணமாக சாலைகளில் மண் பரவி கண்களை பதம் பார்ப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகினற்னர். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இரண்டு மாதங்கள் (ஆனி, ஆடி) கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசுவது வழக்கம். எப்போதும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும்...
கரூர் கையேந்தி பவன்களில் பிஸாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு
கரூர் ஜூலை 6: கரூரில் சாலையோர உணவு கடைகள் கையேந்தி பவன் கடைகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சாலையோர கடைகளும் கையேந்தி பவன் அதிகரித்துள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் கரூர்...
