புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் லால் கஞ்ச் மக்களவை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி சங்கீதா ஆசாத். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜ தேசிய பொது செயலாளர் வினோத் தாவ்டே, மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மற்றும் பாஜ தலைவர் புபேந்திரா சிங் முன்னிலையில் சங்கீதா ஆசாத் பாஜவில் இணைந்தார்.