பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ‘கிளப்பில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உற்சாகமாக பீர் குடிப்பதைக் காணமுடிகிறது. பிரான்சில் நடந்த டாப் 14 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரக்பி அணியின் வீரர்கள் சிலரும் உற்சாகமாக பீர் குடித்து மகிழ்ந்தனர். அதிபர் இம்மானுவேல் மேக்ரான், 17 விநாடிகளில் ஒரு பாட்டில் பீர் குடித்தார். அவரை சுற்றியிருந்த சிலரும் அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோவை பார்த்த பிரான்ஸ் எம்பி உள்ளிட்ட பலரும் அதிபரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில், நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிபர், இவ்வாறு பொதுவெளியில் நடந்து கொள்ளலாமா? என்றும், வீரர்களுடன் பீர் அருந்தியதில் தவறேதும் இல்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.
17 விநாடியில் ஒரு பாட்டில் பீர் காலி சரக்கு அடிப்பதில் பிரான்ஸ் அதிபர் ‘கிங்’
previous post