சித்ரதுர்கா: பாஜ-மஜத கூட்டணி அறமற்ற கூட்டணி என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சித்ரதுர்காவில் பேசிய முதல்வர் சித்தராமையா, ’மஜத வகுப்புவாத கட்சியான பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். இதுவொரு மோசமான கூட்டணி. சில காலம் முன்புவரை, பாஜ மஜதவையும், மஜத பாஜவையும் பரஸ்பரம் விமர்சித்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துள்ளார்கள். கட்சியை காப்பாற்ற கொள்கையை தூக்கி எறிந்துவிட்டதாக மஜத கூறியுள்ளது. இதிலிருந்தே இது அறமற்ற கூட்டணி என்று தெரிகிறது என்றார்.