சேலம்: மகிழ்ச்சியோடு பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார்; மோடி பிரதமரான பிறகு இந்தியா விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருகிறது. விளையாட்டுத் துறையில் அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.