டெல்லி: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.