தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 5
சர்க்கரை – ¼ கப்
நெய் – 1/2 கப்,
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி,
தண்ணீர் – 1/4, கப்
முந்திரி – தேவையான அளவு
உலர்திராட்சை – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் நெய் தடவி தனியாக வைக்கவும். அதன்பிறகு, ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கி அதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்க்கவும். பிறகு, சர்க்கரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும். கலவை திரண்டு வரும் வரை வேக வைக்கவும். பிறகு இன்னொரு பானில் சர்க்கரை எடுத்து அதில் நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து, அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கி, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து நெய்யுடன் சேர்த்து அல்வாவில் ஊற்றி அதனை அல்வா திரண்டு வரும் வரை நன்கு கிளறவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.