Friday, May 31, 2024
Home » உதவி பேராசிரியர் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு

உதவி பேராசிரியர் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு

by Porselvi

தேர்வு: CSIR- UGC-NET- 2023 (December- 2023).
தகுதி: Chemical Sciences/Earth, Atmospheric. Ocean and Planetary Sciences/ Life Sciences/ Mathematical Sciences/ Physical Sciences உள்ளிட்ட கலை, அறிவியல் அல்லது தொழில்நுட்பத்துறை சார்ந்த ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் நெட் தேர்வு நடைபெற்ற தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும்.

எஸ்சி/எஸ்டி/ஒபிசி- நான் கிரிமீலேயர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: நெட் தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிய விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஜூனியர் ரிசர்ச் பெல்ேலாஷிப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ திருநங்கைகள் பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும். ஒபிசியினருக்கு 3 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பானது 01.07. 2023 தேதியின்படி கணக்கிடப்படும்.

சிஎஸ்ஐஆர்- யுஜிசி-நெட் 2023 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மையங்களில் டிச.26,27,28 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ₹1,100/-. ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹550/-. எஸ்சி/எஸ்டி/ திருநங்கைகளுக்கு ₹275/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.csir.net.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக் ககடைசி நாள்: 30.11.2023.

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi