சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன. சென்னையில் இன்றிரவு 8.30-க்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி போட்டித் தொடர் ஆக. 3ல் தொடங்கியது.