சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது. நேற்றிரவு முதல் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஈமெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் நகலை சரி பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.