பியாஜியோ நிறுவனம், அப்ரிலியாவின் ஸ்போர்ட்டியான தோற்றம் உடைய ஸ்கூட்டர்களின் வரிசையில், புதிய அப்ரிலியா எஸ்ஆர் ஸ்டிரோம் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீல் பிரேம்களுடன் பளீச் கிராபிக்ஸ்களுடன் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
9.6 நொடிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தை எட்டும். 12 அங்குல வீல்கள், டியூப்லெஸ் டயர், டிஸ்க் பிரேக்குகள், இடம் பெற்றுள்ளன. கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என நான்கு நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,07,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.