பாணசூரன்: உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவனை பக்தியுடன் வழிபட்டு சிவனிடம் தினமும் 1000 லிங்கங்களை ஒரே நேரத்தில் பூசிக்க 2000 கைகளை பெற்றான். அவனுக்கு அழியாத அக்னிக் கோட்டையை அளித்து ஈசன் தானே கோட்டை காவலனாக இருந்தார். அவன் மகள் உஷா கிருஷ்ணன் மகன் பிரத்யுமனனை மணந்தாள். (மன்மதன் மறுபிறவி) பின் கயிலையில் குடமுழா முழுக்குபவனாக இருக்கிறார்.
சிவபராக்கிரமம்: சிவனின் 64-திருவுருவங்களையும் அவை உண்டாவதற்குக் காரணமான வரலாற்று நிலைகளையும் விவரித்துக் கூறுவதே சிவபராக்கிரமம் என்ற நூல். இதில் வேதம், ஆகமம், புராணம், திருமுறைகள் ஆகியவற்றிலிருந்து உரிய சான்றுகளுடன் 64-திருமேனிகள் உண்டானதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், திருவண்ணாமலை, திருவாரூர் ஆலயத்திலும் மகேஸ்வரமூர்த்தங்களின் அழகான வண்ண ஓவியங்களைக் கண்டு மகிழலாம்.
திருக்கழுகுன்றம்: நான்கு வேதமும் மலைகளாக நின்றிருக்கும் தலம் வேதகிரி. 4 சிகரம். 4 வேதமாக உள்ளது. எவ்வொரு யுகத்திலும் ஒரு வேதமலையின் மீது ஈசன் உள்ளான். இப்போது அதர்வணவேத உச்சியில் உள்ளார். திருக்கழுகுன்றம் யுகத்திற்கு இருவராக 4-யுகங்களிலும் எண்மர் கழுகு வடிவத்திலும் பூசித்து பேறு பெற்றனர். கிருதயுகம் – சண்டன் – பிரசண்டன். திரேதாயுகம் – சம்பாதி – சடாயு. துவாபரயுகம் – சமபுகுத்தன் – மாகுத்தன், கலியுகம் – பூஷா – விதாதா.
திருவிதாங்கோடு: குமரி சிவாலயத்தில் வடக்கில் (சிவனும்) தெற்கில் (திருமாலும்) கோயில் கொண்டு உள்ளனர். மார்கழி மாதம், விழாவில் இருவரும் ஒன்றாக யானையில் வலம் வருவர். தேரழுந்தூர் மாசி புனர்பூசம். ஆமருவியப்பன் (திருமால்), எதிரில் உள்ள ஈசன் கோயிலுள்ள வேதரீஸ்வரர் சந்திப்பு உற்சவம். அச்சமயம் பசு வடிவிலுள்ள அம்பிகைைய மகாவிஷ்ணு, சிவனிடம் ஒப்படைப்பு. இந்த 1 நாள் மட்டும் இருவரையும் ஒரே சமயத்தில் தரிசிக்க முடியும்.
அரசாணிக்கால்: அரசமரம் வேரோடிக்கிளைத்து வளர்வது போல, மணமக்களும் நிறைய புதல்வர்களைப் பெற்று நீண்ட காலம் வாழ்வதற்காக அரசங்கிளையும், மாங்கொத்தும் இணைத்து கட்டப்பட்டுள்ள பச்சைமூங்கிலே அரசாணிக்கால் ஆகும். திருமணம் முன் 5 அல்லது 7 பெண்கள், அதற்கு பால் விட்டு அபிஷேகம் செய்து காப்புகட்டி வழிபடுவர். நீர்கரையில் திருமணம் நடைபெறுவதை குறிக்கும் வகையில் திருமண மேடையின் அருகில் நீர் நிரம்பிய புதுப்பானைகள் வைப்பர்.
அபஸ்மாரன்: நடராஜர் பாத மடியில் பாம்பு, சூசி முத்திரை கொண்டுள்ள முயல்கள் (அபஸ்மாரன்) ஸ்வரம் என்பதற்கு எதிர்மறை பொருள் அபஸ்வரம். மாரன் என்ற சொல்லுக்கு எதிர்மறைப் பொருளை தருவதாக அபஸ்மாரன் உள்ளது. மாரன்மனமயக்கத்தை தருபவன். அதனால் துன்பத்தை விளைவிப்பவன். இவன் சிவன் திருவடி சம்பந்ததிதினால் எல்லோர் மன மயக்கத்தையும் நீக்கி இன்பத்தை அளிப்பவன் எனவே அபஸ்மாரன் எனப்படுகிறான்.
சக்கரகூத்து: திருமால் தினமும் 1000 தாமரை மலர்களால் சிவனை பூசை செய்தபோது ஒரு நாள் பூஜையில் 1 மலரை சிவன் மறைத்தபோது திருமால் தன் கண்ணையே பெயர்த்துப் பூஜை செய்ததால், அவருக்கு பத்மாட்சன் பெயரை சூட்டி, ஜலந்தரனை அழித்த சக்ராயுதத்தை அளித்தார். அதன் வலிமையைத் தாங்கமுடியாமல் திருமால் சோர்ந்தபோது சக்கரத்தை ஐந்து கூறாக்கி, அதிலொன்றை திருமாலுக்கு அளித்து, எஞ்சிய நான்கு பாகங்கள் நான்கு விற்களாயின. அதனை ஏக காலத்தில் வளைத்துச்சிவனும் உமையும் அதனுள் நின்று சக்கரத்
கூத்தாடினார்கள்.
மகாபிரளயம்: மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒருநாள் 365. மனித வருடங்கள், தேவர்களுக்கு ஓராண்டு. இம்மாதிரியான 12,000 ஆண்டுகள் கழிந்தால் தேவர்களுக்கு ஓர் ஊழிக்காலம் முடியும். இப்படி 4000 ஊழிக்காலங்கள் கழிந்தால், பிரம்மனுக்கு 1 பகல் முடியும். இந்த பகல் வேளைக்குள் பூவுலகில் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் தோன்றி உலகை ஆண்டு மறைவர். இப்படிப்பட்ட பகல் முடியும் போது, கடல் பொங்கி மழை பெய்து வெள்ளக் காடாக்கும். அந்த இரண்டாலும் உலகம் நீரில் மூழ்கி அழியும். இதுவே பிரளயம் எனப்படும்.