Thursday, May 9, 2024
Home » ஆப்கானுடன் இன்று 3வது டி20: ஒயிட்வாஷ் செய்ய இந்தியா முனைப்பு

ஆப்கானுடன் இன்று 3வது டி20: ஒயிட்வாஷ் செய்ய இந்தியா முனைப்பு

by Karthik Yash

பெங்களூரு: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூருவில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அடுத்து இந்தூரில் நடந்த 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, ஜிதேஷ், ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். முதல் 2 போட்டியிலும் டக் அவுட்டான கேப்டன் ரோகித் இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். அர்ஷ்தீப், முகேஷ், அக்சர், வாஷிங்டன் பந்துவீச்சு ஆப்கன் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம், ஆறுதல் வெற்றிக்காக ஆப்கான் வீரர்களும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்கள்), விராத் கோஹ்லி, சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான்: இப்ராகிம் ஸத்ரன் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்கள்), ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹமத் ஷா, நஜிபுல்லா ஸத்ரன், ஷராபுதின் அஷ்ரப், கரீம் ஜனத், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பாதின் நயீப், நூர் அகமது, குவாயிஸ் அகமது, நவீன் உல் ஹக், ஃபரீத் அகமது மாலிக், பசல்லாக் பரூக்கி, முஜீப் உர் ரகுமான், முகமது சலீம்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi