டெல்லி : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு மேற்கொண்டார். கூட்டணி தொடர்பாக அன்புமணியுடன் ஜி.கே.வாசன் சுமார் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக சார்பில் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸை நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசினார்.