பெங்களூரு: கடந்த மக்களவை தேர்தலில் பாஜ ஆதரவோடு கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை சுமலதா அம்பரீஷ், தற்போது நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியான மண்டியாவில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் மண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மஜதவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் விரக்தியான சுமலதா அம்பரீஷ் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார். அவரிடம் பாஜ தலைவர்கள் சமாதானம் பேசி வந்த நிலையில், பாஜ இணைவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி, பெங்களூரு, மல்லேஸ்வரத்திலுள்ள பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் விஜயேந்திரா, மாஜி முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா முன்னிலையில் சுமலதா பாஜவில் இணைந்தார்.