சென்னை: பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த உமா கார்த்திகேயன், இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். மேலும் பெரியார், கலைஞர் குறித்து உமா கார்த்திகேயன் அவதூறு பரப்பியதாக ஏற்கனவே திமுகவினர் புகார் அளித்திருந்தனர்.
திமுகவினர் அளித்திருந்த புகார் அடிப்படையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.மேலும் கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் கோவை மத்திய சிறையில் உமா கார்த்திகேயன் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து அவதூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர். உமா கார்த்திகேயனை கோவை சிறையிலிருந்து காவல் துறையினர் சென்னை அழைத்து செல்கின்றனர்.