சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் R.ரவிக்குமார் இயக்கியுள்ள அயலானில் ரகுல்பிரீத்சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2016ல் தொடங்கப்பட்ட அயலான் படம் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.