முன்னாள் நம்பர் 1 வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (33 வயது, டென்மார்க்), 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டு சுமார் மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய முதல் போட்டியில் அபாரமாக வென்று அசத்தியுள்ளார். 2020 ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு, கனடாவில் நடக்கும் மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய வோஸ்னியாக்கி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெலை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி ஒரு மணி, 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் அவர் 2010ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வோஸ்னியாக்கி தனது 2வது சுற்றில் நடப்பு விம்பிள்டன் சாம்பியன் மார்கெடா வோண்ட்ருசோவாவுடன் மோதுகிறார்.
மூன்றரை ஆண்டு இடைவெளி மீண்டும் களமிறங்கி அசத்தும் வோஸ்னியாக்கி
previous post