Friday, April 19, 2024
Home » ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

by Neethimaan

காபூல்; ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல நேற்று 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹெரத் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்காணக்கானோர் காயம் அடைந்தனர். அம்மாகாண மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒருமாத காலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

9 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi