சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். கட்சித் தொண்டர்களையும், கூட்டணியையும் ஒருங்கிணைத்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளால் ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர் என நிர்வாகிகளிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.