சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.200 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி ஒரு சவரன் ரூ.38,200க்கும், 11ம் தேதி ஒரு கிராம் ரூ.4,835க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,680க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.4,835க்கும், சவரன் ரூ.38,680க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது.சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் 2வது நாளாக தங்கம் விலை சவரன் ரூ.200 குறைந்தது.அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,715க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.37,720க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.66க்கும் 1 கிலோ ரூ.66,000க்கும் விற்கப்படுகிறது. இதனிடையே பல வாரங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 38 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருகிறது….