Friday, May 10, 2024
Home » ₹50 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

₹50 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

by kannappan

சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:* சென்னை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன்கள் உற்பத்தி விற்பனை மற்றும் ஏற்றுமதி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் வண்ண மீன் உற்பத்தியினை பெருக்கிடவும், வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்திடவும் மற்றும் ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டின் வண்ண மீன் வர்த்தகத்தை அதிகரித்தடவும் ₹50 கோடியில் சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் நிறுவப்படும்.* தமிழ்நாட்டில் உள்ள 12 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் முக்கிய மீன் இறங்கு தளங்களில் இருந்து மீன் பிடிக்க செல்லும் படகுகளுக்கு ₹30 லட்சம் செலவில் இணையதளம் மூலம் மின்னணு மீன்படி அனுமதி சீட்டுகள் வழங்கப்படும். * தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்கா-மீன் காட்சியக பொருட்கள் விற்பனை மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.* செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு மீன்வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற்சார் பயிற்சி இயக்குனரகத்தில் கொடுவா மீன்களுக்கு தீவனம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை முறைகள் ₹80 லட்சம் செலவில் அமைக்கப்படும்.* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீருயிரி வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான மின்னணு விரிவாக்க மையம் ஒரு கோடியே 6 லட்சம் செலவில் நிறுவப்படும்….

You may also like

Leave a Comment

twenty − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi