அரூர், ஜன.23: அரூர் வாரச்சந்தையில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை குறைந்தது. கடந்த மாதத்தில் கிலோ ₹100 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது விலை குறைந்து 4 கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயமும் 4 கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பூண்டு விலை கிலோவிற்கு ₹80 வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.