Friday, May 10, 2024
Home » விஜய் ஹசாரே டிராபி ஜாக்சன் அதிரடியில் சவுராஷ்டிரா சாம்பியன்: ‘மகா’ கேப்டன் ருதுராஜ் சதம் வீண்

விஜய் ஹசாரே டிராபி ஜாக்சன் அதிரடியில் சவுராஷ்டிரா சாம்பியன்: ‘மகா’ கேப்டன் ருதுராஜ் சதம் வீண்

by kannappan

அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரின் பைனலில், மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச… மகாராஷ்டிரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெயிக்வாட் 108 ரன் (131 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அஸிம் காஸி 37, நவுஷத் ஷேக் 31*, சத்யஜீத் 27 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் சிராக் ஜானி 3, பிரேரக், பார்த் பட், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் – ஷெல்டன் ஜாக்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தேசாய் 50 ரன் எடுத்து வெளியேறினார். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஜாக்சன் 133 ரன் (136 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), சிராக் ஜானி 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மகாராஷ்டிரா பந்துவீச்சில் முகேஷ், விக்கி தலா 2, சத்யஜீத் 1 விக்கெட் எடுத்தனர். ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதும், ருதுராஜ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் காலிறுதியில் 220*, அரையிறுதியில் 168, பைனலில் 108 ரன் விளாசினார். 10 இன்னிங்சில் அவர் 8 சதம் விளாசி அசத்தியதுடன், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

eight − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi