Friday, May 10, 2024
Home » லலித் மோடி – சுஷ்மிதா சென் ‘டேட்டிங்’ உறவு முறிவு?: புகைப்படத்தை மாற்றியதால் பரபரப்பு

லலித் மோடி – சுஷ்மிதா சென் ‘டேட்டிங்’ உறவு முறிவு?: புகைப்படத்தை மாற்றியதால் பரபரப்பு

by kannappan

மும்பை: லலித் மோடி – சுஷ்மிதா சென் ஜோடி ‘டேட்டிங்’ உறவில் இருந்த நிலையில், தற்போது லலித் ேமாடி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை மாற்றியதால் இருவருக்குமான உறவு முறிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் (46) – ஐபிஎஸ்  நிறுவனரும், மோசடி வழக்கில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் தொழிலதிபருமான  லலித் மோடி (58) இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் டேட்டிங்கில்  இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இருவருக்கும் 12 வயது வித்தியாசம்  இருப்பதால், அவர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டனர்.  அதற்கேற்றால் கடந்த ஜூலை 14ம் ேததி லலித்மோடி தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டு, ‘எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை  தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை  திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்’ என்று  கூறியிருந்தார். சுஷ்மிதா சென்னின் குடும்பத்தாரும், அவரது செயலை கண்டித்தனர். இந்நிலையில் லலித் மோடி – சுஷ்மிதா சென் உறவு முறிந்ததாக செய்திகள் வந்துள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் லலித் மோடியும் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பயோவின் புகைப்படத்தை மாற்றியுள்ளார். ஏற்கனவே சுஷ்மிதா சென்னுடன் இருந்த புகைப்படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதனால் சுஷ்மிதா சென் மற்றும் லலித் மோடி ஜோடி பிரிந்ததாக கூறப்படுகிறது….

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi