Friday, May 17, 2024
Home » ரசாயன உலை வெடித்து 6 தொழிலாளர்கள் பலி : குஜராத்தில் இன்று அதிகாலை சோகம்

ரசாயன உலை வெடித்து 6 தொழிலாளர்கள் பலி : குஜராத்தில் இன்று அதிகாலை சோகம்

by kannappan

பரூச்: குஜராத்தில் இன்று அதிகாலை ரசாயன உலை வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பருச் மாவட்டம் தஹேஜ் தொழிற்பேட்டை பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் இரவுப் பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில திடீரென நடந்த வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரூச் போலீஸ் எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், ‘இறந்த தொழிலாளர்கள் 6 பேரும் வெப்பம் அதிகம் உள்ள இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தனர். கெமிக்கலை காய்ச்சி ஊற்றும் போது திடீரென ரசாயன உலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உலைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்….

You may also like

Leave a Comment

11 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi