மேட்டூர், ஏப்.16: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, தொடர்ந்து 200 கனஅடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 68 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 56.43 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 56.23 அடியானது. நீர்இருப்பு 21.96 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி
previous post