Sunday, May 12, 2024
Home » முதல்வர் நாளை கோவை வருகை: திமுக செயலாளர்கள் அறிக்கை

முதல்வர் நாளை கோவை வருகை: திமுக செயலாளர்கள் அறிக்கை

by Ranjith

 

கோவை, மார்ச் 12: கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற வழியில் திராவிட மாடல் அரசின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கோவை வருகிறார்.

பின்னர், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்‌ கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சி, தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடக்கிறது.

எனவே, ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, ஒன்றியக்கழக‌, பகுதிக்கழக, பேரூர் கழக, வட்டக்கழக ‌செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள்,

துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், நகர கழக, ஒன்றிய கழக‌, பகுதிக்கழக, பேரூர் கழக, வட்டக்கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பிஎல்ஏ-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், செயல்வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi