குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமில் அரசுத்துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டார். முகாமில் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகளையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறாளிகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கையேடுகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். முகாமில் ஆர்டிஓ நிறைமதி, வேப்பூர் ஒன்றிய குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துலட்சுமி மதியழகன், குன்னம் தாசில்தார் அனிதா, வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
previous post