நாமகிரிப்பேட்டை, ஜன.11: நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ₹1000 வழங்கும் பணியை, நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி துவங்கி வைத்தார்.ஒன்றிய அவைத்தலைவர் கருப்பண்ணன், பொருளாளர் தன்ராஜ், துணை செயலாளர் அருள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி, ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பேபி, துணை அமைப்பாளர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் ஜெகதீசன், தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளையப்பன், கேசவன் மற்றும் திமுக நிர்வாகிகள் சேகர், மணி, அன்பு, முருகப்பன், சரவணன், இளைஞர் அணி நிர்வாகிகள் கோபி, அருண், வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
previous post