Monday, May 20, 2024
Home » பரமக்குடி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் சிறப்பு முகாம்

பரமக்குடி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் சிறப்பு முகாம்

by Ranjith

பரமக்குடி,பிப்.11: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு நீக்கம் மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு நீக்கம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1374 ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்ற நிலையில், பரமக்குடி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பாகம் 28 முதல் 106 வரையிலான 78 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நகராட்சி தேர்தல் உதவியாளர் சுதா மேற்பார்வையில் நடைபெற்றது.

இதனை பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி பார்வையிட்டார். கடந்த நவம்பர் மாதங்களில் நடைபெற்ற மூன்று சிறப்பு முகாம்கள் மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி, அழகப்பா கலைக் கல்லூரிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 3000க்கும் மேற்பட்ட முகவரி மாற்றம், பெயர் நீக்கம், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று உள்ளது.

You may also like

Leave a Comment

18 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi