Monday, June 3, 2024
Home » பத்மஸ்ரீ, கலைவாணர் விவேக் மரணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

பத்மஸ்ரீ, கலைவாணர் விவேக் மரணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

by kannappan

சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் நடிகர் விவேக்- தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக்- முதல்வர் எடப்பாடி பழனிசாமிசின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் – திமுக தலைவர் ஸ்டாலின்திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக்- துணை முதல்வர் பன்னீர்செல்வம்தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் – பாமக நிறுவனர் ராமதாஸ்நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது- விசிக தலைவர் திருமாவளவன் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக். நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர்.- வைகோசமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர் விவேக்- ரவிக்குமார், எம்.பி சமூக விழிப்புணர்வோடு பணியாற்றிய மகத்தான கலைஞர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு- வைகைச்செல்வன் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். ‘சனங்களின் கலைஞன்’ எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். – டிடிவி தினகரன்சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் – நடிகர் ரஜினிகாந்த்அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே, எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே- கவிஞர் வைரமுத்துசெல் முருகனுக்கு தான் பெரிய இழப்பு, விவேக்குக்கு நிழலாக இருந்தவர்.- ராதாரவி நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும். நடிகர் விவேக் காமெடியன் கிடையாது. அவர் உண்மையான ஹீரோ.- நடிகர் சூரிதர்ம சிந்தனை உடையவர் நடிகர் விவேக்- நடிகர் மயில்சாமிசமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக்- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு- நடிகர் ராகவா லாரன்ஸ்எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும். – இயக்குநர் சேரன்சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்.- இயக்குநர் பார்த்திபன்நாங்கள் கஷ்டப்படும் காலத்தில் இருந்து நெருக்கிய நண்பர்கள்.- ரமேஷ் கண்ணா நல்ல மனிதர் விவேக். விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்.- நடிகர் யோகி பாபுகலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர். வெறும் கருத்துகளை மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை; அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் விவேக்.- பொன்ராஜ்நடிகர் விவேக்கின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றது.- வருண் சக்கரவர்த்திசொர்கத்திற்கான உங்களது பயணம் இவ்வளவு விரைவாக ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.- நடிகர் மாதவன்விவேக் சார் மரங்களை மட்டுமல்ல மக்கள் மனதிலும் நல்ல எண்ணங்களையும் விதைத்துள்ளார்.- நடிகை இந்துஜாஉங்கள் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்;  Rest in peace Vivek sir- அனிருத் அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்- நடிகர் நாசர் Miss u sir.. உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு; வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை- இயக்குநர் அட்லிஎண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி.- நடிகர் பிரகாஷ் ராஜ்நடிகர் விவேக் நட்டு வைத்த மரங்களில் ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் அவரது ஆன்மா இளைப்பாறும்- நடிகர் ஆனந்த்ராஜ்…

You may also like

Leave a Comment

five − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi