சென்னை: தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை தலைவர் வே.சுப்புராமன் மறைவுக்கு, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவரும், தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளருமான வே.சுப்புராமன் (76) உடல்நலக் குறைவால் நேற்று காலை இயற்கை எய்தினார். தொ.மு.ச. பேரவை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….