திருவிடைமருதூர், ஜூன் 22: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருமங்கைச்சேரி கடைவீதியில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ஒன்றிய செயலாளர்கள் கோ.க.அண்ணாதுரை உதயசந்திரன், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொலைபேசி பலர் பேசினர்.