திருத்துறைப்பூண்டி, மார்ச் 13: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரசாரம் வார்டு 5, 13 மற்றும் 14வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது. வீடு, வீடாக சென்று திமுக அரசின் சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி, நகர வார்டு நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.